நங்கநல்லூரில் பள்ளி ஆசிரியை தற்கொலை
சென்னையை அடுத்த நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி (வயது 45). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் வசந்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலந்தூர்,
இதுகுறித்து வசந்தியின் மகன் தீபக் பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், தனது தாயாரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குடும்பத்தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.* ஆதம்பாக்கத்தில் காதல் தோல்வி காரணமாக மெக்கானிக் ராமச்சந்திரன் (27) தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* பள்ளிக்கரணையில் வீடுகளில் திருடியதாக நெல்லையைச் சேர்ந்த ராஜா (30) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 பவுன் தங்கநகைகள் மீட்கப்பட்டன.
Related Tags :
Next Story