ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி திருமணமான 40-வது நாளில் பரிதாபம்
தஞ்சை அருகே திருமணமான 40-வது நாளில் ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலியானார்.
தஞ்சாவூர்,
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் தினேஷ்(வயது28). இவர் தனது நண்பர் சந்துருவுடன் இணைந்து சென்னையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார். நேற்றுமுன்தினம் தினேஷ் தனது நண்பர் சந்துருவின் சொந்த ஊரான தஞ்சை மானோஜிப்பட்டிக்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்று வந்த இவர்கள் இரவில் வல்லம் அருகே உள்ள வண்ணாரப்பேட்டை புதுஆற்றங்கரைக்கு சென்றனர். இவர்களுடன் மேலும் சிலரும் இருந்தனர்.
பின்னர் இவர்கள் அனைவரும் புதுஆற்றில் இறங்கி குளித்தனர். ஆற்றில் தண்ணீர் அதிகஅளவில் வந்து கொண்டிருந்ததால் தினேஷ் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதை பார்த்த சக நண்பர்கள் சத்தம்போட்டவாறு அவரை காப்பாற்ற முயற்சி செய்த னர். ஆனால் தண்ணீரின் வேகத்தால் நீண்டதூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டதுடன் தண்ணீரில் அவர் மூழ்கினார். இதனால் செய்வது அறியாமல் தவித்த நண்பர்கள் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களும் வந்து தேடி பார்த்தனர்.
ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்றுகாலை தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட உதவி அலுவலர் இளஞ்செழியன் உத்தரவின்பேரில் நிலைய அதிகாரி கோபால்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆற்றில் இறங்கி தினேசை தேடினர். இதில் புதுஆறு படித்துறை பகுதியில் தினேசை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
பின்னர் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து வல்லம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி பலியான தினேசின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு திருமணமாகி 40 நாட்கள் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story