கோவையில் ஜாமீனில் விடுதலையான வாலிபர் குத்திக்கொலை-3 பேர் கைது
கோவையில், ஜாமீனில் விடுதலையான வாலிபர், குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கத்திமுனையில் மிரட்டிய நபரை காட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
துடியலூர்,
கோவை ரத்தினபுரியை அடுத்த தில்லை நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் மீது ரத்தினபுரி, சரவணம்பட்டி, துடியலூர் போலீஸ் நிலையங்களில் திருட்டு, அடிதடி, கஞ்சா பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
கடந்த 1 மாதத்துக்கு முன்பு திருட்டு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 நாட்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த சீனிவாசன், கோவை 2-வது கோர்ட்டில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இவர் வெள்ளக்கிணறு-கணபதி ரோட்டில் அஞ்சுகம் நகரில் கத்தியால் குத்தப்பட்டும், கல்லால் தாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசலு, இன்ஸ்பெக்டர் வெற்றிவேந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சீனிவாசனின் உடலில் பல இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சீனிவாசன் மீது ஏற்கனவே அடிதடி வழக்குகள் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன்பேரில் சீனிவாசன் மீது உள்ள வழக்குகளின் விவரம், அதில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதனிடையே நேற்று காலை தனிப்படை போலீசார் இந்த கொலை தொடர்பாக கோவை ரத்தினபுரியை சேர்ந்த குமார் என்ற கட்டிங் குமார் (30), செந்தில்குமார்(30), சூர்ய பிரகாஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கொலைக்கான காரணம் குறித்து தகவல் கிடைத்தது.
அதே பகுதியை சேர்ந்த விக்கி (30) என்பவர் முன்விரோதம் காரணமாக இவர்கள் 3 பேரையும் கத்திமுனையில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கட்டிங் குமார் உள்பட 3 பேரும், விக்கியை தீர்த்துக்கட்டும் நோக்கத்தில் ரத்தினபுரி பகுதிக்கு குடிபோதையில் சென்றுள்ளனர். அப்போது சீனிவாசன் அந்த பகுதியில் நின்றுள்ளார். விக்கியையும், அவர் தங்கியுள்ள வீட்டையும் காண்பிக்குமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் சீனிவாசன் காண்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சீனிவாசன் மீது 3 பேருக்கும் ஆத்திரம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மறைவான இடத்துக்கு கூட்டிச்சென்று கத்தியால் குத்தியும், கல்லால் தாக்கியும் அவர்கள் சீனிவாசனை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கைதான 3 பேரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கொலையாளிகளை விரைவாக பிடித்து கைது செய்த தனிப்படை போலீசாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி பாராட்டினார்.
கோவை ரத்தினபுரியில் அடிதடி மோதல், கோஷ்டி மோதல் மற்றும் கொலைகள் அடிக்கடி நடைபெற்று வருவதால் தீவிர கண்காணிப்பு நடத்துமாறும், குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் துடியலூர் மற்றும் ரத்தினபுரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story