அ.தி.மு.க. 46-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு


அ.தி.மு.க. 46-வது ஆண்டு விழா: எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வின் 46-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தஞ்சையில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அடங்கிய ஒன்றுபட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க.வின் 46-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பரசுராமன் எம்.பி. தலைமை தாங்கினார்.

பின்னர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மாவட்ட பால்வளத் தலைவர் காந்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், ஒன்றிய செயலாளர் துரை.திருஞானம், பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், காவிரி சிறப்பு அங்காடி தலைவர் பண்டரிநாதன், முன்னாள் ஊராட்சிக்குழு உறுப்பினர் தம்பிதுரை மற்றும் பலர் கலந்து ெ-ாண்டனர்.

அ.தி.மு.க.(அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அணி சார்பில் தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் தஞ்சை ரெயிலடியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்வேலவன், கோவி.மனோகரன், மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மணிகண்டன், நிர்வாகிகள் விருத்தாசலம், மகேந்திரன், ஜின்னா, அழகுராஜா, ராஜா, அய்யாவு, சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story