அருமனை அருகே தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது


அருமனை அருகே தந்தையை கட்டையால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 18 Oct 2017 4:30 AM IST (Updated: 18 Oct 2017 3:38 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை கட்டையால் அடித்துக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். குடிபோதையில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.

அருமனை,

குமரி மாவட்டம் அருமனை அருகே மஞ்சாலமூடை அடுத்த நெடுமான்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 62), தொழிலாளி. இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு முருகேசன் (29) மற்றும் மகேஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

இதில் முருகேசன் கேரளாவில் வெல்டிங் வேலை செய்து வந்தார். அவர் இரு நாட்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்திருந்தார். நேற்று மாலையில் தந்தை குமரேசனும், மகன் முருகேசனும் மது குடித்து விட்டு வந்ததாகவும், போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போது ஆத்திரம் அடைந்த முருகேசன் கட்டையால் குமரேசனை தாக்கினார். இதில் குமரேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் மற்றும் அருமனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொலை செய்யப்பட்ட குமரேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை தொடர்பாக முருகேசனை போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

Related Tags :
Next Story