வவ்வால்களுக்கு வாழ்வளித்து பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்
மணப்பாறை அருகே வவ்வால் களுக்கு வாழ்வளிக்க பட்டாசு வெடிக்காமல், கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுகின்றனர்.
மணப்பாறை,
புத்தாடை அணிந்து, இனிப்பு, கார வகைகளுடனும், மணக்கும் பிரியாணியுடனும் இன்று(புதன்கிழமை) தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே அனைவரின் நினைவுக்கு வருவது பட்டாசு தான். ஆம், பட்டாசு வெடிப்பதில் தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அன்றைய தினம் பட்டாசு கொளுத்தினால்தான் ஒரு நிம்மதியே. ஆனால், பட்டாசுகளை கையில் எடுக்காமல் 2 கிராம மக்கள் தீபாவளியை கொண்டாடுகிறார்கள் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கிறது.
திருச்சி மாவட்டம், மணப் பாறை அருகே உள்ளது தோப்புபட்டி. இங்கு பழமை வாய்ந்த ஆலமரம் ஒன்று உள்ளது. அந்த ஆலமரத்தின் கீழ் பகுதியில் முனியப்பன்சாமி உள்ளது. இங்கு தினமும் பலரும் வந்து சாமி கும்பிட்டு விட்டுச் செல் கிறார்கள். சுற்றிலும் வயல் சூழ்ந்த பகுதியின் நடுவில் அமைந்துள்ள ஆலமரத்தில் ஆரம்ப காலங்களில் வவ்வால்கள் அதிகளவில் வாழ்ந்து வந்தன. அதன் பின்னர் வவ்வால் களில் அதிக மருத்துவ குணம் உள்ளது என்று எண்ணிய சிலர் அதை வேட்டையாடினர். இதனால் அந்த வவ்வால்கள் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து வந்தன.
இருக்கிற கொஞ்ச வவ்வால்களையாவது காப்பாற்றுவோம் என்று எண்ணிய தோப்புபட்டி கிராம மக்கள், வேட்டையாட வருபவர் களின் துப்பாக்கிகளை பிடுங்கி அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக வவ்வால்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால், மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள் தொடர்ந்து வவ்வால்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி வவ்வால்கள் வாழும் பகுதியில் சத்தம் ஏற்படாமல் இருக்க தீபாவளி உள்பட எந்த விசேஷ நாட்களிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வந்தனர். இதன் காரணமாக அந்த ஊரில் நடக்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பது கிடையாது. வழக்கம்போல இந்த தீபாவளி பண்டிகையின்போதும் பட்டாசு வெடிப்பதில்லை என்பதில் அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர்.
இதேபோல் மணப்பாறை அருகே உள்ளது, சாம்பட்டி. இங்குள்ள ஆரியபெருமாள் கோவில் மிகவும் பழமையானது. கோவிலின் மேல்பகுதியில் உள்ள ஆலமரத்தில் அதிக அளவில் வவ்வால்கள் வாழ்கின்றன. பறவை இனங்களில் பாலூட்டிகளாக வாழ்ந்து வரும் வவ்வால்கள் பழங்களை தேடி மாலையில் பயணத்தை தொடங்குகின்றன. அதிகாலை மீண்டும் தங்களின் இருப்பிடத்திற்கு வரத்தொடங்குகின்றன. சாம்பட்டி பகுதிக்கு சென்றாலே ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வசிப்பதை நாம் காணலாம்.
இங்கும் தீபாவளி உள்பட விசேஷ நாட்களில் பட்டாசுகளை தவிர்த்து வருகின்றனர். புகை மூட்டம் ஏற்படுத்தும் மத்தாப்புகளுக்கும் அனுமதி கிடையாது. இப்படியாக மகிழ்ச்சியான நாளில் கூட பட்டாசை தவிர்த்து வவ்வால்களுக்கு வாழ்வளித்து சத்தம் இல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அந்த 2 கிராம மக்களும் பாராட்டுக்குரியவர்களே.

Related Tags :
Next Story