டெங்கு கொசுவை அழிக்க குடிநீர் கிணற்றில் கப்பி மீன்கள்
டெங்கு கொசுவை அழிக்க குடிநீர் கிணற்றில் கப்பி மீன்கள் விடும் பணியினை கலெக்டர் வீரராகவராவ் நேற்று ஆய்வு செய்தார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி ஹார்விப்பட்டி, திருநகர் பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி ஆணையாளர் அனீஷ் சேகர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வீடு வீடாக அபேட் மருந்து தெளித்தல், கொசு புகை மருந்து பரப்புதல், தேங்கிய குப்பைகளை அகற்றுதல், மழைநீர் வாய்க்காலை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர் கலெக்டர் அங்குள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, குடிநீர் தொட்டியில் டெங்கு கொசு உற்பத்தி இருக்கிறதா என பார்த்தார். மேலும் பொதுமக்களிடம் வாய்க்காலில் பிளாஸ்டிக் குப்பைகளை போடுவதை தவிர்க்குமாறும், வீடுகளில் பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகளை வைக்குமாறும் கேட்டு கொண்டார். தொடர்ந்து அவர், ஒவ்வொரு தெருவிலும் உள்ள மழைநீர் வாய்க்காலில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆயில்பால் தெளிக்கும் பணியினையும் பார்வையிட்டார். வீடுகளில் உள்ள குடிநீர் கிணற்றில் கொசு உற்பத்தியை தடுப்பதற்காக கம்போசியா மற்றும் கப்பி மீன்கள் விடப்பட்டது. இந்த பணியினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். சுத்தமாக பராமரிக்கப்பட்ட ஒரு வீட்டின் முகப்பு சுவரில் “சுத்தமான வீடு” என எழுதி வைத்து அதன் உரிமையாளருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அந்த பகுதி மக்கள், கலெக்டரிடம் இங்கு அதிக அளவில் பன்றிகள் உள்ளதாக புகார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பன்றிகளை பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அங்குள்ள ஒரு கடையில் ஆய்வு செய்த போது பச்சை மற்றும் நீல நிற குப்பை கூடைகள் இல்லை. எனவே அந்த கடைக்கு உடனடியாக ரூ.1500 அபராதம் விதித்தார். தொடர்ந்து அந்த கடையில் உள்ள எடை எந்திரத்தை ஆய்வு செய்தார். அதுவும் சரியான எடை காட்டாத காரணத்தால், அதனையும் கலெக்டர் பறிமுதல் செய்தார்.
இதன்தொடர்ச்சியாக ஆணையாளர் அனீஷ் சேகர் திருநகர் மருதுபாண்டியர் தெரு, விசாலாட்சி தெரு ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். மருது பாண்டியர் தெருவில் ஒரு வீட்டில் கொசு புழு உற்பத்தி இருப்பதை கண்டறிந்து வீட்டின் உரிமையாளரை அழைத்து உடனடியாக தொட்டியினை சுத்தம் செய்து அப்புறப்படுத்துமாறும், அடுத்த முறை இதுபோல் இருந்தால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்.
அங்குள்ள ஒரு வீட்டில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரில் கொசு உற்பத்தி அதிகளவில் இருப்பதை கண்டறிந்து பொது சுகாதார துறை மூலம் நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர் கவுசலாம்பிகை, உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்திரவேல், முகமதுரசூல், செயற்பொறியாளர் சேகர், திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் சேகர், சுகாதார அலுவலர் ராஜ்கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், உதவிப்பொறியாளர்கள் முனீர் அகமது, முருகன் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story