அ.தி.மு.க. கட்சியின் ஆண்டு விழா: எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அ.தி.மு.க. கட்சியின் ஆண்டு விழாவை தொடர்ந்து, அந்த கட்சியினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 46-வது ஆண்டு விழா திருப்பரங்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார், ஒன்றிய துணை செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, பெரியபுள்ளான், பகுதி செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மதுரை மாநகர அ.தி.மு.க. சார்பில் கே.கே.நகர் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.சிலைக்கு அவைத்தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில் பொருளாளர் ராஜா, எம்.ஜி.ஆர்.மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், பகுதி செயலாளர் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதை தொடர்ந்து டி.டி.வி.தினகரன் அணி சார்பில் மதுரை மாநகர செயலாளர் ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல திருமங்கலத்தை அடுத்த கண்டுகுளம் கிராமத்தில் அ.தி.மு.க. ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இதே போல் டி.டி.வி. தினகரன் அணி அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் மகேந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். இதில் மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதையொட்டி திருமங்கலம் நகரின் பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க. கட்சி கொடிகள் ஏற்றப்பட்டன. சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிக்க திரண்டதால் கண்டுகுளம் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story