அடுத்தகுடி கிராமத்தில் மதுபானக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


அடுத்தகுடி கிராமத்தில் மதுபானக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 19 Oct 2017 6:00 AM IST (Updated: 19 Oct 2017 1:57 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அடுத்தகுடி கிராமத்தில் ஆண்டாவூரணி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தொண்டி,

இதற்காக இரவு வேளையில் அந்த கடைக்கு மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கடை திறக்கப்படுவதை அறிந்த அடுத்தகுடி, ஆண்டாவூரணி, என்.எம்.மங்கலம் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் பெண்கள் மதுக்கடை முன்பாக திரண்டனர். பின்னர் அங்கு பணியில் இருந்த டாஸ்மாக் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்த கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த எஸ்.பி.பட்டினம் போலீசார் பேச்சுவார்தை நடத்தினர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story