கோவையில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


கோவையில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி
x
தினத்தந்தி 19 Oct 2017 4:45 AM IST (Updated: 19 Oct 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

கோவை இடையார் பாளையத்தில் குளத்தில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை,

கோவை இடையார்பாளையம் பி.கே.புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் பிரவீன் குமார்(வயது15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். அதே பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன்(12). அந்த பகுதியில் உள்ள ஆசிரம பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்தநிலையில் நேற்று மாலை தெற்குமண்டலம் பின்புறம் உள்ள செங்குளத்தில் பிரவீன் குமாரும், விக்னேஸ்வரனும் குளிக்கச்சென்றனர். அங்கு குளத்தில் இறங்கி இருவரும் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தனர்.

இந்தநிலையில் இருவரும் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். இதில், இருவரும் தண்ணீரில் நிலைகொள்ள முடியாமல் ஒருவர் பின் ஒருவராக குளத்தில் மூழ்கி பலியாகினர். இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் இறங்கி இருவரது உடலையும் மீட்டனர்.

குனியமுத்தூர் போலீசார் அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story