பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது


பெங்களூருவில் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி: கட்டிட உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 19 Oct 2017 3:50 AM IST (Updated: 19 Oct 2017 3:50 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு ஈஜிபுரா குண்டப்பா ரோடு 7-வது கிராசில் கணேஷ் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் இருந்தது.

பெங்களூரு,

இந்த கட்டிடத்தில் இருந்த 6 வீடுகளை அவர் வாடகைக்கு விட்டு இருந்தார். இந்த வீடுகளில் 6 குடும்பத்தினர் வசித்து வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதன் தொடர்ச்சியாக 2 மாடி கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்து தரைமட்டமானது.

அந்த கட்டிடத்தில் வசித்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் விவேக் நகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீவிரமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். மீட்பு பணி முடிவில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி சரவணா (வயது 30), சரவணாவின் மனைவி அஸ்வினி (25), கலாவதி (65), ரவிசந்திரா (45), பவன்கல்யான், ஹரிபிரசாத், மாலத்திரி ஆகியோர் உடல் நசுங்கி பலியானது தெரியவந்தது. மேலும், சரவணாஅஸ்வினி தம்பதியின் மகள் சஞ்சனா (3), உள்பட சிலர் படுகாயம் அடைந்து வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கியாஸ் சிலிண்டர் வெடித்து 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 7 பேர் பலியானதற்கு காரணம் எனக்கூறி அந்த கட்டிட உரிமையாளர் கணேசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதான கணேசிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story