தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஒருங்கிணைந்த மேலாண்மை சான்றிதழ்
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஒருங்கிணைந்த மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு ஒருங்கிணைந்த மேலாண்மை சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
ஒருங்கிணைந்த சான்றிதழ்தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்திய பெருந்துறைமுகங்களில் முதன்மையாக ஒருங்கிணைந்த மேலாண்மை சான்றிதழை பெற்றுள்ளது. தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ், சுற்றுசூழல் தர மேலாண்மை சான்றிதழ், தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ் ஆகிய 3 உலகத்தர சான்றிதழ்களை இணைத்து ஒருங்கிணைந்த சான்றிதழ்களாக பெற்றுள்ளது. இந்த சான்றிதழை வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜெயகுமாரிடம், துணை தலைவர் நடராஜன் முன்னிலையில் இந்திய பதிவு தர அமைப்பை சேர்ந்த சுரேஷ் நாதன் வ.உ.சி. துறைமுகத்தில் வைத்து வழங்கினார்.
குறைந்த தொழிலாளர்களை...வ.உ.சி. துறைமுகம் பன்னாட்டு தரச்சான்றிழ்களான 9001:2015, 14001:2015 மற்றும் 18001:2007 வகைகளின் புதிய பதிப்புகளில், கப்பல்துறை வசதிகள் மற்றும் கடற்துறைமுக போக்குவரத்து வசதிகள் சம்பந்தமான ஆதரவு சேவைகளை வழங்கும் வகையில் தரமான ஏற்றுமதி, இறக்குமதி சேவையை உறுதிப்படுத்துதல், சுற்றுச்சூழல் மாசுபடுதலை பாதுகாத்தல், காயங்கள் மற்றும் உடல்நலக் குறைவு ஏற்படாமல் தடுத்தல் மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் துறைமுக வணிக மேம்பாட்டிற்காகவும் விற்பனையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக குறைவான மணியளவில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு துறைமுக செயல்பாடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் 29.08.2017 அன்று முதல் புதுப்பித்துள்ளது.
பிற சான்றிதழ்இந்த துறைமுகம் இந்திய பெருந்துறைமுகங்களில் முதன்மையாக 1996–ம் ஆண்டு தர மேலாண்மை அமைப்பு சான்றிதழ், இந்திய பெருந்துறைமுகங்களில் 2–வதாக 2005–ம் ஆண்டு சுற்றுசூழல் தர மேலாண்மை சான்றிதழ் மற்றும் 10.04.2017 அன்று முதல் தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சான்றிதழ்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது, என வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.