சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்


சங்கரன்கோவிலில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 Oct 2017 2:45 AM IST (Updated: 19 Oct 2017 6:22 PM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவில் பிளாஸ்டிக் குடோனில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் பிளாஸ்டிக் குடோனில் பங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

குடோன் தீப்பிடித்தது

சங்கரன்கோவில் ராமசாமியாபுரம் 7–ம் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 49). இவர் மாதாங்கோவில் தெருவில் எல்க்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார். கடையில் உள்ள பிளாஸ்டிக் குழாய்கள் மற்றும் குடிநீர் தொட்டிகள் ஆகியவற்றை சங்கர்நகர் 3–ம் தெருவில் உள்ள அவரது குடோனில் வைத்திருந்தார். சம்பவத்தன்று மதியம் 1 மணிக்கு திடீரென குடோனில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ வேகமாக பரவ ஆரம்பித்தது. உடனே அவர்கள் சங்கரன்கோவில் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

பொருட்கள் எரிந்து நாசம்

இதுகுறித்து தகவல் அறிந்த சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் அருணாசலம் ஆகியோர் தலைமையில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ வேகமாக பரவியது. இதனால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முடியாமல் திணறினர்.

உடனே வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. மேலும் தீயணைப்பு வீரர்கள், போலீசார், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சுமார் 1½ மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. வெடி வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story