ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்து தொழிலாளி சாவு மற்றொருவர் படுகாயம்
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
ஸ்ரீவைகுண்டம்,
ஸ்ரீவைகுண்டம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.
தொழிலாளர்கள்
நெல்லை டவுன் சாலைத்தெருவை சேர்ந்தவர் பாஞ்சாலி ராஜன் (வயது 50). நெல்லையை அடுத்த கோபாலசமுத்திரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் இசக்கிமுத்து (27). இவர்கள் 2 பேரும் நெல்லை டவுனில் உள்ள காய்கறி கடையின் தொழிலாளிகள்.
இவர்கள் 2 பேரும், கடந்த 17–ந்தேதி இரவில் ஒரு ஆட்டோவில் காய்கறி மூடைகளை ஏற்றிக் கொண்டு, அவற்றை நாலுமாவடியில் கொண்டு சென்று இறக்கினர். பின்னர் அதிகாலையில் அங்கிருந்து ஆட்டோவில் நெல்லைக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். பாஞ்சாலி ராஜன் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தை கடந்து குளத்துகரை பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரம் உள்ள வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து கவிழ்ந்தது.
ஒருவர் சாவு
இந்த விபத்தில் ஆட்டோவின் ஸ்டீயரிங் பாஞ்சாலி ராஜனின் வயிற்றில் குத்தி கிழித்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த இசக்கிமுத்து உயிருக்கு போராடியவாறு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமன்ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசார் விசாரணை
படுகாயம் அடைந்த இசக்கிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த பாஞ்சாலி ராஜனின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த பாஞ்சாலி ராஜனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

Related Tags :
Next Story