திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் டி.ஜி.வினய் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருசில பகுதிகளில் காய்ச்சல் பரவி இருக்கிறது. மர்ம காய்ச்சல் காரணமாக சிலர் இறந்து உள்ளனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் நேற்று கலெக்டர் டி.ஜி.வினய், டெங்கு தடுப்பு பணிகளை திடீர் ஆய்வு செய்தார்.
இதில் திண்டுக்கல் தாலுகா அலுவலக சாலையில் உள்ள காமராஜர்புரம் மற்றும் அய்யன்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மேலும் வீடு, வீடாக சென்றும் பார்வையிட்டார். அப்போது டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தண்ணீர் தேங்காமல் வைத்திருக்க வேண்டும். தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
தண்ணீர் தொட்டிகள்
மேலும் அந்த பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள், மேல்நிலை குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டார். குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குடிநீர் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தண்ணீர் தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் கொசுக்கள் உருவாகுவதை தடுக்க தண்ணீர் தேங்காமல் தடுக்கவும் அறிவுறுத்தினார்.
இதையடுத்து மலைக்கோட்டையில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை குடிநீர் தொட்டியை பார்வையிட்டார். அங்கு குடிநீர் தொட்டி முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா? குடிநீர் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி உத்தரவிட்டார்.
காந்தி மார்க்கெட்
அதேபோல் திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டையும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது மழைக்காலத்தில் மார்க்கெட் சேறும், சகதியுமாக மாறி விடுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கலெக்டர் டி.ஜி.வினய் உறுதிஅளித்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் மனோகர், நகர்நல அலுவலர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story