கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர்.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. 16 கிலோ மீட்டர் நீளம், 5.6 கிலோ மீட்டர் அகலம், 48 கிலோ மீட்டர் சுற்றளவு என பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த வீராணம் ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வரும், மழைக்காலங்களில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வழியாக வீராணம் ஏரிக்கு வரும்.
இந்த வீராணம் ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.
அதுமட்டுமின்றி சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்ப்பதும் இந்த ஏரிதான். இந்த நிலையில் கடந்த ஆண்டு பருவமழை போதுமான அளவுக்கு பெய்யாததால் வீராணம் ஏரி வறண்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.
மேலும் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாத நிலையும் உருவானது. இந்த நிலையில் கர்நாடகாவில் பெய்த தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதனால் அணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணைக்கு வந்தது. இதையடுத்து அங்கிருந்து கடந்த 5-ந்தேதி கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இருப்பினும் அணையில் இருந்து குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் அணை திறக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாகியும் 9 அடி கொள்ளளவு கொண்ட கீழணைக்கு தண்ணீர் வராமல் இருந்தது. இதனிடையே வீராணம் ஏரியை நம்பி காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் சிதம்பரம் பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சம்பா சாகுபடி பணியை தொடங்கினர்.
நேரடி நெல் விதைப்பு செய்த விவசாயிகள் விதைப்பு விட்டு பல நாட்கள் ஆகியும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் சூழ்நிலை உருவானது. இதையடுத்து விவசாய சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து கடந்த 16-ந்தேதி அணைக்கரையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்படாததால் கீழணைக்கு இது வரையில் தண்ணீர் வரவில்லை. இதனால் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க கல்லணையில் இருந்து கீழணைக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறினர். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் வறண்டு கிடந்த கீழணையின் நீர் மட்டம் 8 அடியாக உயர்ந்தது.
இந்த அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வருகிற 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கடந்த 17-ந்தேதியை கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு 650 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வடவாறு வழியாக நேற்று முன்தினம் வீராணம் ஏரிக்கு வந்தது.
இதனிடையே நேற்று கீழணையில் இருந்து 550 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1200 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
இதனால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் ஏரி விரைவில் நிரம்ப கீழணையில் இருந்து மேலும் அதிக அளவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story