21 ஆண்டுகளுக்கு பிறகு பாக்கம் ஏரி நிரம்பியது ஆடு வெட்டி பொதுமக்கள் பூஜை
குடியாத்தம் அருகே 21 ஆண்டுகளுக்கு பிறகு பாக்கம் ஏரி நிரம்பியது. ஆடு வெட்டி பொதுமக்கள் பூஜை செய்தனர்.
குடியாத்தம்,
பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறை, பாலாறு வடிநில உபகோட்டத்தின் கீழ் அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், செருவங்கி பெரிய ஏரி, தட்டான்குட்டை, கூடநகரம், அம்மணாங்குப்பம், வேப்பூர், நெட்டேரி, கீழ்ஆலத்தூர், பசுமாத்தூர் பெரியஏரி, பசுமாத்தூர் சித்தேரி, காவனூர், வேப்பங்கனேரி ஏரி, மேல்மாயில், பாக்கம், பரதராமி, ரெட்டிமாங்குப்பம், பெரியவரிகம், மலையம்பட்டு ஆகிய 20 ஏரிகள் உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், மோர்தானா அணை நிரம்பி வழிவதாலும், வழிந்தோடும் தண்ணீர் வலது, இடதுபுற கால்வாய்கள் மற்றும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் சென்ற வெள்ளத்தாலும் அக்ராவரம், பெரும்பாடி, எர்த்தாங்கல், வேப்பூர், ரெட்டிமாங்குப்பம் ஆகிய ஏரிகள் நிரம்பி வழிந்தது.
குடியாத்தம் செருவங்கி பெரியஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி தற்போது 50 சதவீதம் நிரம்பியுள்ளது.
குடியாத்தம் பாக்கம் ஏரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவும், சுமார் 50 மில்லியன் கனஅடி கொள்ளளவும் கொண்டது. இந்த பாக்கம் ஏரி கடந்த 1996-ம் ஆண்டு நிரம்பியது. 21 ஆண்டுகளுக்கு பிறகு பாக்கம் ஏரி தற்போது நிரம்பியது.
இந்த ஏரி நிரம்பியதால் குடியாத்தம் டவுன், கே.வி.குப்பம், காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
பாக்கம் ஏரி நிரம்பி வழிவதை தொடர்ந்து பொதுமக்கள் ஆடு வெட்டி பூஜைகள் செய்து வழிபட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரி, கள்ளூர் ரவி, வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் சுரேஷ், டாக்டர் ரமேஷ்நாயுடு உள்பட கிராம மக்கள் பூஜையில் கலந்து கொண்டனர். திரளான பொதுமக்கள் ஏரி நிரம்பியதை பார்த்து சென்றனர்.

Related Tags :
Next Story