டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர் ரோகிணி


டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர் ரோகிணி
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்து மாணவிகளுக்கு பாடம் நடத்திய கலெக்டர் ரோகிணி

தலைவாசல்,

சேலம் மாவட்டம் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் அந்த பள்ளியில் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் அந்த பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் டெங்கு காய்ச்சல் குறித்து ஒரு ஆசிரியர் போன்று பாடம் நடத்தினார்.

அப்போது டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது?, எந்த தண்ணீரில் டெங்கு கொசுப்புழு வளர்கிறது? எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும்?, வீட்டை சுற்றி எந்தெந்த பொருட்களை அகற்ற வேண்டும்? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை மாணவ, மாணவிகளிடம் கேட்டார்.

அதற்கு, டெங்கு கொசுப்புழு நல்ல தண்ணீரில் வளர்கிறது, பிளாஸ்டிக், தேங்காய் ஓடு போன்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை வீட்டை சுற்றி இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், தண்ணீரை மூடி வைக்க வேண்டும் என்றும் பதில் கூறிய மாணவி கோமதியை மாவட்ட கலெக்டர் ரோகிணி பாராட்டினார்.

அவர் பாடம் நடத்திய போது, வகுப்பு ஆசிரியை சாந்தி, தலைமை ஆசிரியர் திருமுருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பள்ளி வளாகத்தை பார்வையிட்ட கலெக்டர், தண்ணீர் தேங்காமல் பள்ளி வளாகத்தை சுத்தமாக பராமரிக்குமாறு தலைமை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கினார். 

Related Tags :
Next Story