ஏரியில் இறங்கி பொதுமக்கள் போராட்டம் மோர்தானா கால்வாயில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்
குடியாத்தம் அருகே செட்டிக்குப்பம் ஓட்டேரி ஏரிக்கு மோர்தானா அணை கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி பொதுமக்கள் ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் அருகே செட்டிக்குப்பம் ஊராட்சியில் ஓட்டேரி ஏரி உள்ளது.
மோர்தானா அணையின் வலதுபுற கால்வாய் மூலம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை ஏரிக்கு தண்ணீர் வருகிறது. ஆனால், இந்த ஏரியை அடுத்துள்ள செட்டிக்குப்பம் ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் வழித்தடம் அமைக்கவில்லை. கடந்த 17 ஆண்டுகளாக ஓட்டேரி ஏரிக்கு நீர் வழிப்பாதை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
செட்டிக்குப்பம் ஓட்டேரி ஏரி 85 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் செட்டிக்குப்பம், போஜனாபுரம், மேல்முட்டுக்கூர், கூடநகரம் பகுதிகளில் 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகிறது.
கோடை காலங்களில் இந்த ஏரி வறண்டு விடுவதால், விவசாயம் செய்ய முடிய வில்லை. குடிநீர் பஞ்சமும் ஏற்படுகிறது. இதனால் நீர் வழிப்பாதை அமைத்து மோர்தானா அணை நீரை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஓட்டேரி ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த மழையால் பல ஏரிகள் நிரம்பி உள்ளன. ஆனால் மோர்தானா அணை நிரம்பி அதில் இருந்து வரும் தண்ணீர் ஓட்டேரி ஏரிக்கு வர வழியில்லை. ஓட்டேரி ஏரிக்கு நீர் வரும் வழித்தடம் இல்லை. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம். நீர்வரத்து கால்வாயை அகலப்படுத்தி தூர்வார வேண்டும்.
ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியாத்தத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story