மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் சாவு


மதுரை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேர் சாவு
x
தினத்தந்தி 20 Oct 2017 5:00 AM IST (Updated: 20 Oct 2017 5:00 AM IST)
t-max-icont-min-icon

மதுரை சோழவந்தானை அடுத்த தேனூரை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 58). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார்.

மதுரை,

இதனால் சமயநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். ஆனாலும் காய்ச்சல் குணமடையாததால், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்தபோது, டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

சமயநல்லூரை அடுத்த தோடனேரியைச் சேர்ந்த ஆர்த்திகா (26) காய்ச்சல் காரணமாக சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார். காய்ச்சல் குறையாதநிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதற்காக சிகிச்சை பெற்றும் பலனில்லாததால் அவர் பரிதாபமாக இறந்தார்.

மேலூர் கோமதியாபுரத்தை சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன் (48). சவர தொழிலாளியான இவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதித்து மேலூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலன் இன்றி ஆஸ்பத்திரியில் இறந்துபோனார்.

Next Story