மதுரை ஒத்தக்கடை பகுதியில் கல்குவாரி நீரில் மூழ்கி அக்காள்-தங்கை பலி


மதுரை ஒத்தக்கடை பகுதியில் கல்குவாரி நீரில் மூழ்கி அக்காள்-தங்கை பலி
x
தினத்தந்தி 20 Oct 2017 5:10 AM IST (Updated: 20 Oct 2017 5:09 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ஒத்தக்கடை நரசிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, லாரி டிரைவர். இவருக்கு பூஜாஸ்ரீ (வயது 10), ஸ்ரீநிதி (8) என்ற மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

மதுரை,

 அதே பகுதியில் உள்ள பள்ளியில் பூஜாஸ்ரீ 4-ம் வகுப்பும், ஸ்ரீநிதி 2-ம் வகுப்பு படித்து வந்தனர். தீபாவளி பண்டிகை தினத்தன்று மலைச்சாமி, தனது மனைவி, குழந்தைகளுடன் அருகில் உள்ள கல் குவாரியில் தேங்கி இருக்கும் நீரில் குளிக்க சென்றார். பின்னர் அங்கு குளித்துக் கொண்டிருந்த பூஜாஸ்ரீயும், ஸ்ரீநிதியும் வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை.

எனவே மலைச்சாமி அதிர்ச்சி அடைந்து தீயணைப்புத்துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து அந்த பகுதி மக்களும் நீரில் இறங்கி அவர்களை தேட தொடங்கினர். இறுதியில் பூஜாஸ்ரீயை பிணமாக மீட்டனர். ஆனால் ஸ்ரீநிதி எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி ஸ்ரீநிதி உடலை மீட்டனர்.

இதுகுறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தீபாவளி அன்று ஒரே குடும்பத்தில் அக்காள்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story