பணிமனை கட்டிடம் இடிந்து 8 பேர் பலி: போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம்
பணிமனை கட்டிடம் இடிந்து விழுந்து 8 பேர் பலி: போக்குவரத்து தொழிலாளர்கள் சார்பில் இரங்கல் கூட்டம்
நாகர்கோவில்,
நாகை மாவட்டம் பொறையார் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் தொழிலாளர் ஓய்வு அறை கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் இறந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அரசு விரைவு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் நேற்று இரங்கல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, செயலாளர் ஜான்ராஜன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் தங்கசெழியன், பொருளாளர் இஸ்ரவேல், ரத்தினசாமி, ராஜமார்த்தாண்டன், ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story