முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது.
நாகர்கோவில்,
முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவின் உச்ச நிகழ்ச்சியான சூரசம்ஹார விழா வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து முருகன் கோவில்களிலும் நடைபெற இருக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் போன்றவை தொடங்கியது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் அம்மன் சன்னதி அருகே அமைந்துள்ள ஸ்ரீபாலமுருகன் சன்னதியில் கந்தசஷ்டி விழா தொடங்கி யது. இந்த விழாவையொட்டி காலை 5 மணிக்கு கணபதிஹோமம், 6 மணிக்கு கால்நாட்டு மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி, 9 மணிக்கு தன்வந்திரி ஹோமம், 11 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம், மாலை 5 மணிக்கு சமய அரங்கம், இரவு 7 மணிக்கு அலங்கார தீபாராதனை, 7.30 மணிக்கு உற்சவமூர்த்தி, மூலவர் மற்றும் அம்பாளை மும்முறை சுற்றிவரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. காப்புக்கட்டும் நிகழ்ச்சியின்போது 100-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் காப்புக்கட்டி விரதம் தொடங்கினர். சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகத்தின்போது ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். ஆண்களைவிட பெண் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.
வெள்ளிமலை
இதேபோல் வெள்ளிமலை பாலசுப்பிரமணியசாமி கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்று காலை 6 மணிக்கு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. 10 மணிக்கு அபிஷேகம் நடந்தது. 12 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடைபெற்றன.
இதேபோல் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் அமைந்துள்ள பாலமுருகன் சன்னதி, குமாரகோவில் குமாரசாமி கோவில் ஆகியவற்றில் கந்தசஷ்டி விழா நேற்று தொடங்கியது.
தோவாளை
தோவாளை செக்கர்கிரி சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில், கணபதிஹோமம், அபிஷேகம், காப்புகட்டுதல், அன்னதானம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். வருகிற 25-ந் தேதி(புதன்கிழமை) மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், இரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் சாமி வாகனத்தில் உலா வருதல் போன்றவை நடைபெறுகிறது. 26-ந் தேதி சாமிக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
ஆரல்வாய்மொழி
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம், வவ்வால்குகை பாலமுருகன் கோவிலிலும் கந்த சஷ்டி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று விரதம் இருக்கும் பக்தர்கள் காப்புகட்டி கொண்டனர். மேலும், சாமிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, அன்னதானம் போன்றவை நடந்தன. தொடர்ந்து வருகிற விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. 25-ந் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். அதை தொடர்ந்து வாணவேடிக்கை நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 26-ந் தேதி பாலமுருகனுக்கு ஆறாட்டு நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகளை ஆரல்வாய்மொழி, பெருமாள்புரம் இந்து நாடார் சமுதாய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர். இதுபோல், ஆரல்வாய்மொழி மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், தாழக்குடி அழகேஸ்வரி ஜெயந்தீஸ்வரர் கோவில் ஆகியவற்றில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
மருங்கூர்
மருங்கூர் திருமலை சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடு, தீபாராதனை சாமி வாகனத்தில் பவனி வருதல் போன்றவை நடைபெறும். வருகிற 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. 29-ந் தேதி இரவு 7 மணிக்கு மயிலாடி ஆற்றில் ஆறாட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.

Related Tags :
Next Story