வைகை அணையில் இருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


வைகை அணையில் இருந்து விரைவில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 20 Oct 2017 11:21 PM GMT (Updated: 2017-10-21T04:51:19+05:30)

வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு விரைவில் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் வீரராகவராவ் அறிவித்தார்.

மதுரை,

மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டஅரங்கில் நேற்று காலை நடந்தது. கூட்டத்தை மாவட்ட வருவாய்துறை அதிகாரி குணாளன் நடத்த தொடங்கினார். அப்போது கூட்டத்திற்கு கலெக்டர் வரவில்லை எனகூறி ஒரு தரப்பினர் வெளிநடப்பு செய்வதாக கூறினார்கள். சிறிது நேரத்தில் கலெக்டர் வீராகவராவ் கூட்ட அரங்கிற்கு வந்தார்.

உடனே மற்றொரு தரப்பு விவசாயிகள், கலெக்டர் வரவில்லை எனசொல்லி வெளிநடப்பு செய்தது தவறு எனசுட்டிக்காட்டினர். அதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கலெக்டர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார். அதைதொடர்ந்து கலெக்டர் வீரராகவராவ் பேசியதாவது:-

பெரியாறு கால்வாய்பாசன பகுதிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடவேண்டும் என விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. பெரியாறு அணையில் கடந்தஆண்டு இதே நாளில் 802 மில்லியன் கனஅடிதண்ணீர் இருந்தது. தற்போது 2ஆயிரத்து 984 மில்லியன்கனஅடிநீர்உள்ளது. அதேபோல் வைகை அணையில் கடந்த ஆண்டு 150 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. இப்போது 2 ஆயிரத்து 457 மில்லியன் கனஅடி இருக்கிறது.

இப்போது நீர்இருப்பு உள்ள நிலையில் இருபோக பாசன பகுதிக்கு தண்ணீர் திறக்க முடியும். விரைவில் அணையில் இருந்து
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர்கூறினாா.

Next Story