கயத்தாறு அருகே, கிணற்றை தூர்வாரியபோது தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி சாவு


கயத்தாறு அருகே, கிணற்றை தூர்வாரியபோது தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Oct 2017 8:30 PM GMT (Updated: 21 Oct 2017 12:57 PM GMT)

கயத்தாறு அருகே கிணற்றை தூர்வாரியபோது, தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே கிணற்றை தூர்வாரியபோது, தலையில் பாறாங்கல் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

கிணற்றை தூர்வாரியபோது...

கயத்தாறு அருகே உள்ள உசிலங்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளி பாண்டியன் (வயது 55) கூலி தொழிலாளி. கயத்தாறு அருகே சிவஞானபுரத்தில் பாஸ்கர் என்பவரது தோட்டத்தில் கிணறு தூர்வாரும் பணி நேற்று காலையில் நடந்தது. இந்த பணியில் காளி பாண்டியன் உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

கிணற்றுக்குள் பாறைகளை வெடி வைத்து தகர்த்து, அதனை கப்பி மூலம் கயிறு கட்டி வெளியே இழுத்து அப்புறப்படுத்தினர். காளி பாண்டியன் கிணற்றுக்குள் இறங்கி, பாறாங்கற்களை கப்பியின் கூடையில் ஏற்றினார். தொடர்ந்து மற்ற தொழிலாளர்கள் கிணற்றின் வெளியே நின்று கயிற்றை இழுத்தனர்.

தலையில் பாறாங்கல் விழுந்து...

பாறாங்கற்கள் ஏற்றப்பட்ட கப்பியின் கூடையை கிணற்றுக்குள் இருந்து வெளியே இழுத்தபோது, எதிர்பாராதவிதமாக ஒரு பாறாங்கல் தவறி கிணற்றுக்குள் நின்ற காளி பாண்டியனின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறிதுநேரத்தில் காளி பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காளி பாண்டியனுக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.


Related Tags :
Next Story