இரட்டை இலை சின்னத்தை ஒரு வாரத்தில் மீட்போம் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு


இரட்டை இலை சின்னத்தை ஒரு வாரத்தில் மீட்போம் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2017 11:00 PM GMT (Updated: 21 Oct 2017 9:50 PM GMT)

இரட்டை இலை சின்னத்தை இன்னும் ஒருவாரத்தில் மீட்போம் என்று, கும்பகோணத்தில் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.

கும்பகோணம்,

அ.தி.மு.க.வின் 46-ம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி தஞ்சை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் கும்பகோணம் மீன்மார்க்கெட் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு கும்பகோணம் நகர செயலாளர் ராம.ராமநாதன் தலைமை தாங்கினார். பூதலூர் ஒன்றிய செயலாளர் ரெத்தினசாமி, சோழபுரம் பேரூர் செயலாளர் ஆசாத்அலி, திருபுவனம் பேரூர் செயலாளர் சிங்செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கும்பகோணம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சோழபுரம் அறிவழகன் வரவேற்றார். அமைச்சர் ரா.துரைக்கண்ணு, பாரதிமோகன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளமதி சுப்ரமணியன், தவமணி, ராம்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் ஆர்.எஸ்.செல்வராஜ் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.

இரட்டை இலை

கூட்டத்தில் அமைச்சர் ரா.துரைக்கண்ணு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழக மக்களுக்கு பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பல நல்ல திட்டங்களை செய்து வருகிறது. குறிப்பாக வேளாண்மைதுறைக்கு குறுவை சாகுபடி திட்டம், வாகனங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. பெரும்பான்மையான தொண்டர்கள், நிர்வாகிகளின் ஆதரவு இருப்பதால் இன்னும் ஒரு வாரத்தில் இரட்டை இலை சின்னத்தை மீட்போம். இவ்வாறு அவர் கூறினார். முடிவில் மாவட்ட பொருளாளர் கோபிநாதன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story