நிதி நிறுவன மோசடியால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள், பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு
களியக்காவிளை அருகே நிதி நிறுவன மோசடியால் பணத்தை இழந்த வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
களியக்காவிளை,
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த ஓணம் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் குடும்பத்துடன் தலைமறைவானார்.
நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்திருந்த கேரள மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்று தர கோரி தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மத்தம்பாலை ஊருக்கு நேற்று சென்றிருந்தார். அப்போது, நிதி நிறுவன வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனித்தனியாக மனுக்களை அளித்தனர். தாங்கள் நிதி நிறுவனத்தில் செலுத்திய பணத்தை திரும்ப பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த நிதி நிறுவனத்தில் பல்லாயிரகணக்கானோர் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். இதன் உரிமையாளர் நிர்மலனுக்கு கேரளாவில் உள்ள சில அரசியல் தலைவர்களுடன் தொடர்பு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அது குறித்து புகார்களும் அளித்துள்ளனர். ஆனால் தமிழகம் மற்றும் கேரள போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இதனால் பணத்தை இழந்தவர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.
எனவே இது சம்பந்தமாக தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள் மற்றும் இருமாநில முதல்வர்களையும் நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். நிதி நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பா.ஜனதா சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Related Tags :
Next Story