விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை தாய்-மகன் கைது


விசைத்தறி தொழிலாளி அடித்துக்கொலை தாய்-மகன் கைது
x
தினத்தந்தி 22 Oct 2017 3:45 AM IST (Updated: 22 Oct 2017 3:21 AM IST)
t-max-icont-min-icon

நெகமம் அருகே உருட்டுக் கட்டையால் அடித்து விசைத்தறி தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்தனர்.

நெகமம்,

நெகமம் அருகே செஞ்சேரிமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி ஆதி திராவிடர் காலனியை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 35) விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி ராதாமணி (33), இவர்களுக்கு தமிழரசன், ராமன், லட்சுமணன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். ராமன், லட்சுமணன் ஆகியோர் இரட்டையர்கள் ஆவர். இந்த நிலையில் சசிக்குமார் நேற்று முன்தினம் மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்துள்ளார். இதனை ராதாமணியின் சகோதரி நாகமணி (48) மற்றும் அவரது மகன்கள் அருண்குமார், சதீஷ்குமார் ஆகியோர் தட்டிக்கேட்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நாகமணி மற்றும் அவரது மகன்கள் அருண்குமார், சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து சசிக்குமாரை அருகில் இருந்த கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. பதிலுக்கு சசிக்குமாரும் கட்டையால் தாக்கினார். இந்த மோதலில் சசிக்குமார், அருண்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சசிக்குமார் போகும் வழியிலேயே இறந்தார். அருண்குமார் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகமணி, அவரது மகன் சதீஷ்குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Tags :
Next Story