தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேச்சு


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேச்சு
x
தினத்தந்தி 23 Oct 2017 4:00 AM IST (Updated: 23 Oct 2017 3:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. பேச்சு

திண்டுக்கல்,

ஒட்டன்சத்திரம் நகர தி.மு.க. சார்பில், 15, 16-வது வார்டுக்கு உட்பட்ட சத்தியாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக, நகர செயலாளர் வெள்ளைச்சாமி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், மேற்கு மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அர.சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் தினமும் பலர் உயிரிழக்கின்றனர். இதனால் தமிழகத்தை டெங்கு பாதித்த மாநிலமாக அரசு அறிவிக்க வேண்டும். டெங்குவை ஒழிக்க வேண்டுமானால் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன், வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் முருகேசன், கிட்டான் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story