தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி செல்வோர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி செல்வோர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2017 2:30 AM IST (Updated: 31 Oct 2017 5:42 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி செல்வோர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபயிற்சி செல்வோர்களிடம் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கங்களில் நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கு கட்டணம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டணம் முறை இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இதனை கண்டித்து தூத்துக்குடி தருவை மைதானம் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கட்டண வசூல்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாவட்ட விளையாட்டு அரங்கில் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் தருவை மைதானம் உபயோகிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் உபால்டுவால்டர், செயலாளர் கணேசன், பொருளாளர் சிவசூரியன் உள்பட நடைபயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள வந்த பொதுமக்கள், வீரர்கள் கலந்து கொண்டனர்.

Next Story