தூத்துக்குடியில், மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற போது டிரான்ஸ்பார்மர் வெடித்து பெண் படுகாயம்


தூத்துக்குடியில், மொட்டை மாடியில் நடைபயிற்சி சென்ற போது டிரான்ஸ்பார்மர் வெடித்து பெண் படுகாயம்
x
தினத்தந்தி 1 Nov 2017 2:30 AM IST (Updated: 31 Oct 2017 8:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மொட்டைமாடியில் நடைபயிற்சி சென்ற போது டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் வேளாண்மை அலுவலக பெண் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மொட்டைமாடியில் நடைபயிற்சி சென்ற போது டிரான்ஸ்பார்மர் வெடித்ததால் வேளாண்மை அலுவலக பெண் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

தற்காலிக பணியாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த செல்வராஜ் மகள் சங்கீதா (வயது 24). இவர் தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வருகிறார். இதனால் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி பணியாற்றி வந்தார். இவர் தினமும் விடுதியின் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி மேற்கொள்வார்.

நேற்று அதிகாலையிலும் நடைப்பயிற்சி மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த விடுதியின் அருகே ஒரு டிரான்ஸ்பார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று காலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் இருந்த சிதறிய தீப்பிழம்பு சங்கீதா மீது விழுந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த சங்கீதா பலத்த காயங்களுடன் முதல் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சங்கீதாவை, அந்த வழியாக வந்த கீதாஜீவன் எம்.எல்.ஏ. மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து சம்பந்தப்பட்ட டிரான்ஸ்பார்மரை உடனடியாக சரிசெய்தனர்.


Next Story