நெல்லை டவுனில் தனியார் வங்கி ஊழியரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல்; 8 பேர் மீது வழக்கு
நெல்லை டவுனில் தனியார் வங்கி ஊழியரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கி ஊழியர் நெல்லை டவுன் தண்டியல் சாவடி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள தனி
நெல்லை,
நெல்லை டவுனில் தனியார் வங்கி ஊழியரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டிய, 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி ஊழியர்நெல்லை டவுன் தண்டியல் சாவடி தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் குடும்ப தேவைக்கு சிலரிடம் ரூ.5½ லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராமச்சந்திரன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்–ஒழுங்கு) சுகுணா சிங்கிடம் புகார் மனு அளித்தார். இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க நெல்லை டவுன் போலீசாருக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார்.
8 பேர் மீது வழக்குஇது தொடர்பாக டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் விசாரணை நடத்தினார். இந்த நிலையில் கந்து வட்டி புகாரின் பேரில், டவுனை சேர்ந்த மாலையப்பன், தாழையூத்து கருப்பசாமி, கண்டியப்பேரி மாதவன், கங்கைகொண்டான் அரிகரன், வன்னிகோனேந்தல் முருகன், டவுன் பிரேம், ராமகிருஷ்ணன், வெங்கடேஷன் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.