ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,500 கனஅடியாக குறைந்தது
நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 4,500 கனஅடியாக குறைந்தது.
பென்னாகரம்,
வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சற்று உயர்ந்தும், பின்னர் குறைந்தும் வருகிறது.
நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,200 கனஅடியாக இருந்தது. இந்த நிலையில் நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் நேற்று பகலில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4,500 கனஅடியாக குறைந்தது. நேற்று மாலை வரை நீர்வரத்து இதே அளவில் நீடித்தது.
ஒகேனக்கல் அருவிகளில் மிதமான அளவில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியது. நேற்று வந்த சுற்றுலா பயணிகள் மெயின்அருவி, சினிபால்ஸ் ஆகியவற்றில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளில் பலர் பரிசல்களில் சென்று காவிரி ஆற்றின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர். தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தின் அளவை மத்திய நீர்வளத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story