டிரைவர் நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில் தானாக நகர்ந்து பஸ் நிலைய நுழைவு வாயிலில் லாரி மோதியது


டிரைவர் நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில் தானாக நகர்ந்து பஸ் நிலைய நுழைவு வாயிலில் லாரி மோதியது
x
தினத்தந்தி 1 Nov 2017 4:30 AM IST (Updated: 1 Nov 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் டிரைவர் நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்தில் லாரி தானாக நகர்ந்து பஸ் நிலைய நுழைவு வாயிலில் மோதியது.

ஆரல்வாய்மொழி,

காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று அதிகாலையில் ஒரு லாரி பாறை பொடி ஏற்றி சென்றது. அதை ராஜாவூர் அருகே தோப்பூரை சேர்ந்த தர்மர் (வயது40) என்பவர் ஓட்டி சென்றார். அந்த லாரி ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் சென்ற போது, போலீசார் அதை நிறுத்துமாறு சைகை காட்டினர். உடனே, டிரைவர் சிறிது தூரம் தள்ளிச்சென்று லாரியை நிறுத்திவிட்டு, ஆவணங்கள் காட்டுவதற்காக லாரியில் இருந்து இறங்கி சோதனை சாவடி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, லாரி தானாக முன்னோக்கி நகர்ந்து உருண்டு ஓடி, ஆரல்வாய்மொழி பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் மோதியது. இதில் நுழைவு வாயில் லேசாக சேதம் ஏற்பட்டது. அதே நேரத்தில் லாரியின் முன்பகுதியில் பலத்த சேதம் அடைந்தது.

லாரி மோதிய பகுதியில் பகல்வேளையில் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதிகாலையில் இந்த விபத்து நடந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story