நாகர்கோவிலில் பா.ஜனதா சார்பில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் திரளானோர் பங்கேற்பு


நாகர்கோவிலில் பா.ஜனதா சார்பில் நடந்த ஒற்றுமை ஓட்டத்தில் திரளானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 1 Nov 2017 4:15 AM IST (Updated: 1 Nov 2017 2:02 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பா.ஜனதா சார்பில் நடந்த தேசிய ஒருமைப்பாட்டு ஒற்றுமை ஓட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை பா.ஜனதா கட்சி தேசிய ஒருமைப்பாட்டு ஒற்றுமை தினமாக கடைபிடித்து வருகிறது. இதையொட்டி குமரி மாவட்ட பா.ஜனதா மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு ஒற்றுமை ஓட்டம் நடந்தது.

நாகர்கோவில் கே.பி.ரோட்டில் உள்ள மாவட்ட பா.ஜன தா அலுவலகம் முன்பிருந்து மாவட்ட மகளிர் அணி சார்பில் ஒற்றுமை ஓட்டம் தொடங்கியது. இதற்கு மகளிர் அணி தலைவி பிரியா சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்துக்கிருஷ்ணன் ஓட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் பார்வையாளர் தேவ், பொதுச்செயலாளர் மணிசுவாமி, நகரசபை முன்னாள் தலைவர் மீனாதேவ், உமாரதி ராஜன், கிருஷ்ணகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஓட்டம் கலெக்டர் அலுவலக சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக்கல்லூரி, மணிமேடை, அரசமூடு சந்திப்பு வழியாக நாகராஜா திடலை சென்றடைந்தது. அங்கு பா.ஜனதா மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி முடித்து வைத்தார். ஒற்றுமை ஓட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் பா.ஜனதா மாவட்ட இளைஞரணி சார்பில் நாகர்கோவில் பார்வதிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தேசிய ஒருமைப்பாட்டு ஒற்றுமை ஓட்டம் தொடங்கியது. இதற்கு இளைஞரணி மாவட்ட தலைவர் நீலேஷ்ராம் தலைமை தாங்கினார். பா.ஜனதா தலைவர் முத்துக்கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இந்த ஓட்டம் வெட்டூர்ணிமடம், வடசேரி, பாலமோர் ரோடு, தலைமை தபால் நிலையம் வழியாக நாகராஜா திடலை சென்றடைந்தது.


Next Story