மோடியை பற்றி தவறாக விமர்சிப்பதா? உபேந்திராவுக்கு எதிராக சட்ட போராட்டம்


மோடியை பற்றி தவறாக விமர்சிப்பதா? உபேந்திராவுக்கு எதிராக சட்ட போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2017 4:00 AM IST (Updated: 1 Nov 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

உபேந்திராவுக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று ஷோபா எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

நடிகர் உபேந்திரா புதிய கட்சியை தொடங்கி இருப்பது குறித்து பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

திரைத்துறையில் நடிகர் உபேந்திரா ஒரு நடிகராக வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அரசியல் கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே அவர் தவறு செய்துள்ளார். அவர் நடித்த ஒரு பாடல் வரிகளை கொண்டு மோடியை பற்றி தவறாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதை பா.ஜனதா ஒப்புக்கொள்ளாது. இது சரியல்ல. இதற்கு எதிராக நாங்கள் சட்ட போராட்டம் நடத்துவோம்.

மோடி ஒரு பெரிய தலைவர். உலக நாடுகளுக்கு தலைமை தாங்கும் சக்தி படைத்தவர். அவரை தரக்குறைவாக விமர்சிப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம். ஜனநாயகத்தில் கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது.

இவ்வாறு ஷோபா கூறினார்.


Next Story