மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சர்வாதிகாரமாக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டுவோம்; நாராயணசாமி ஆவேசம்
மக்களின் உணர்வுகளை மதிக்காமல் சர்வாதிகாரமாக செயல்படுபவர்களுக்கு பாடம் புகட்டுவோம் என்று புதுச்சேரி விடுதலை நாள் வாழ்த்து செய்தியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி விடுதலை நாளை முன்னிட்டு முதல்-அமைச்சர் நாராயணசாமி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நம்முடைய சுதந்திர போராட்ட தியாகிகளின் தொடர் போராட்டங்களினால் புதுச்சேரி மாநிலம் நவம்பர் 1-ந்தேதி விடுதலை பெற்றது. இந்த நாள் விடுதலை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற தியாக மறவர்களை போற்றும் தினமாக இந்த விடுதலை தினத்தை நாம் கொண்டாட வேண்டும்.
பலரின் தியாகத்தால் நாம் பெற்ற விடுதலையை பேணிக்காப்பது நமது கடமை. விடுதலை பெற்ற பின்னும் பிரான்சு நாட்டின் இந்திய ஜன்னலாக கருதப்படும் புதுச்சேரிக்கென உள்ள தனித்த அடையாளங்கள் என்றுமே மாறாதவையாகும். அதேபோல் புதுச்சேரி மக்களுக்கென தனித்த குணங்களும், அடையாளங்களும் பல உண்டு. உலகிலேயே சிறந்த நாகரீக பழக்கவழக்கங்களையும் நல்ல குணங்களையும் கொண்டவர்கள் புதுச்சேரி மக்கள்.
நாம் நமது பணிகளை சிறப்பாக செய்து மாநில வளர்ச்சிக்கென நம் பங்களிப்பை முழுமையாக வழங்கவேண்டும். இதனை வெற்று விளம்பரங்களுக்காக இல்லாமல் தங்களின் அடிப்படை கடமையாக கருதி பணியாற்ற வேண்டும். நமது தனித்த அடையாளங்களை அழிப்பதற்கான முயற்சிகளை யார் எடுத்தாலும் அவர்களை நாம் ஒன்றுபட்டு விரட்டிட வேண்டும்.
புதுச்சேரி மாநில விடுதலை போராட்ட வரலாற்றின் வீரியத்தை அறியாத சிலர் மக்களின் உணர்வுகளையும், மாநில உரிமைகளையும் அவமதிக்கும் வகையில் நடந்துகொள்கிறார்கள். மீண்டும் நாம் அடிமைப்படுத்தப்பட்டு விட்டோமோ என்கிற எண்ணம் பொதுமக்களிடம் எழும் அளவிற்கு சர்வாதிகாரமாக நடந்துகொள்வோர் நம் வீர வரலாற்றினை அறிந்துகொள்ளும் வகையில் இத்திருநாளை எழுச்சியுடன் கொண்டாட வேண்டும்.
விடுதலை வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் வாக்களித்ததை மதித்து அன்று நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரெஞ்சு அரசாங்கமே விடுதலையை அளித்துவிட்டு வெளியேறியது. மக்களின் தீர்ப்புதான் ஒரு நாட்டில் மகத்தானது உயர்ந்தது என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்ற கூற்றை ஒரு சிலருக்கு நாம் பாடம்புகட்ட வேண்டும்.
இந்த விடுதலை திருநாள், நம் உணர்வுகளையும் உரிமைகளையும் வென்றெடுக்கும் நாளாகவும், நம் மாநில வளர்ச்சிக்கென நம்மை நாம் முழு மனதுடன் அர்ப்பணிக்க உறுதியேற்கும் நாளாக அமைந்திடவும் புதுச்சேரி மாநில மக்கள் அனைவருக்கும் என் இனிய புதுச்சேரி விடுதலை திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story