செந்துறையில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

செந்துறை,
அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுக்காவில் முன்பு இயங்கி வந்த 8 டாஸ்மாக் கடைகளும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் தொடர் போராட்டம் காரணமாக மூடப்பட்டது. அதனால் அந்த கடைகளை விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளர்கள் இணைந்து குடியிருப்பு பகுதிகளுக்கு ஒதுக்குபுறமாக உள்ள இடத்தின் உரிமையாளர்களின் ஆதரவோடு கடையை திறந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ்.மாத்தூரில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை செந்துறை செம்பட்டாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. மேலும் அந்த கடையின் அருகிலேயே மற்றொரு கடையையும் அமைக்க டாஸ்மாக் ஊழியர்கள் முயற்சி செய்தனர். இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திறக்கப்பட இருந்த மற்றொரு புதிய டாஸ்மாக் கடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story