தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 2 Nov 2017 2:00 AM IST (Updated: 1 Nov 2017 6:24 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

அம்மா திட்ட முகாம்

அனைத்து கிராமங்களில் அடித்தட்டு மக்களுக்கு அதிக சேவை வழங்க தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ள அம்மா திட்ட சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை, அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடத்தப்படுகிறது. இந்த வாரத்துக்கான முகாம் நாளை(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

அதன்படி தூத்துக்குடி தாலுகா அய்யனடைப்பு கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகா கீழ்பிடாகை அப்பன்கோவில் கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகா மேலஆத்தூரிலும், சாத்தான்குளம் தாலுகா பள்ளக்குறிச்சியிலும், கோவில்பட்டி தாலுகா இடைச்செவல் பகுதி–1 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகா மல்லீஸ்வரபுரம்–குமார சக்கனாபுரம் கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகா சிந்தலக்கரை கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகா மலைப்பட்டியிலும், கயத்தாறு தாலுகா காலாங்கரைபட்டியிலும் முகாம் நடக்கிறது.

கோரிக்கைகள்

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வண்ணம் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு – இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு உடனடியாக பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை முகாமில் கொடுத்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.


Next Story