பாளையங்கோட்டையில் புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு பயிற்சி தொடக்கம் 271 பேர் பங்கேற்பு


பாளையங்கோட்டையில் புதிதாக தேர்வான பெண் போலீசாருக்கு பயிற்சி தொடக்கம் 271 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 2 Nov 2017 2:30 AM IST (Updated: 1 Nov 2017 8:30 PM IST)
t-max-icont-min-icon

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் போலீசாருக்கு பாளையங்கோட்டையில் நேற்று பயிற்சி தொடங்கியது. இதில் 271 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

நெல்லை,

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் போலீசாருக்கு பாளையங்கோட்டையில் நேற்று பயிற்சி தொடங்கியது. இதில் 271 பேர் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.

போலீஸ்காரர்கள்

தமிழகம் முழுவதும் ஆண், பெண் போலீசார் தேர்வு கடந்த செப்டம்பர்மாதம் நடந்தது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்கள் போலீஸ் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் நேற்று தமிழகம் முழுவதும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள போலீஸ் பள்ளியில் பயிற்சி தொடங்கியது.

பயிற்சி தொடக்க நாளான நேற்று புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட போலீசார் தங்களுடைய உடமைகளுடன், பயிற்சி பள்ளியில் அதிகாலை 5 மணிக்கு ஆஜரானார்கள். காலை 6 மணிக்கு வெள்ளை சீருடையுடன், அனைவருக்கும் பயிற்சி தொடங்கியது.

பயிற்சி தொடக்கம்

நெல்லை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாளையங்கோட்டை ஆயுதப்படை ஆகிய 2 இடங்களில் போலீஸ் பயிற்சி பள்ளி உள்ளது. இதில் மணிமுத்தாறில் ஆண் போலீசாருக்கும், பாளையங்கோட்டை ஆயுதப்படையில் பெண் போலீசாருக்கும் பயிற்சி தொடங்கியது.

பாளையங்கோட்டை ஆயுதப்படையில் பயிற்சிக்கு 290 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதில் 271 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு நேற்று காலையில் பயிற்சி தொடங்கியது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும், பயிற்சி பள்ளி முதல்வருமான அருண்சக்திகுமார் தொடங்கிவைத்தார்.

துணைபோலீஸ்சூப்பிரண்டு சங்கரநாராயணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்–இன்ஸ்பெக்டர்கள் இந்த பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த பயிற்சி 10 மாதங்கள் நடைபெறஉள்ளது.


Next Story