வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கும் திட்டம் புத்துயிர் பெறுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ்துறை மூலம் நடைமுறைப்படுத்தப்பட்ட வாட்ஸ்-அப் எண்ணில் புகார் தெரிவிக்கும் திட்டம் புத்துயிர் பெறுமா? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர்,
தமிழ்நாட்டில் உள்ள போலீஸ் நிலையங்களில் இணையதளம் வாயிலாக புகார் மனுவை பதிவு செய்தல், புகாரின் நிலை குறித்து அறிதல், முதல் தகவல் அறிக்கையின் நிலை, விபத்து வழக்கில் தொடர்புடைய வாகனங்களின் நிலை, அடையாளம் காணப்படாத உடல்கள் உள்ளிட்ட 8 வகையான இணையதள சேவைகளை தமிழக காவல்துறை வழங்கி வருகிறது. tnp-o-l-i-ce.gov.in என்கிற தமிழ்நாடு காவல்துறை இணையதளம் வாயிலாக இந்த சேவைகளை பொதுமக்கள் பெற்று பயன்அடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கும் நடைமுறையும் கோவை, திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் அமல்படுத்தப்பட்டது. இதில் நகராட்சி, பேரூராட்சிகளை உள்ளடக்கிய போலீஸ் சூப்பிரண்டின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் பெரம்பலூரில் தான் முதல் முறையாக “வாட்ஸ்-அப்” மூலம் போலீசுக்கு புகார் அளிக்கும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு சோனல் சந்திரா அறிமுகப்படுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் உடனுக்குடன் புகார் தெரிவிப்பதற்கு ஏதுவாக 8681000100 என்கிற வாட்ஸ்-அப் எண் மாவட்ட போலீஸ்துறை சார்பில் வெளியிடப்பட்டது. இந்த வாட்ஸ்-அப் எண் அச்சிடப்பட்ட விளம்பர பலகை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலை, நகரபகுதிகள், ஊராட்சி பகுதிகளில் ஆங்காங்கே வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து விபத்து, போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலான சம்பவங்கள் மற்றும் நகைபறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இது பொதுமக்களுக்கும், போலீசுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது. மேலும் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வரும் தகவலை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இணையதளம் மூலம் போலீசார் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்தனர். பிரச்சினைக்குரிய புகார் நேரடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் சுமூக தீர்வு காணப்பட்டது.
இந்த நிலையில் 8681000100 என்கிற போலீஸ்துறை வாட்ஸ்-அப் எண் பெரும்பாலும் சுவிட்சு ஆப் என்கிற நிலையில் தான் இருக்கிறது. இதனால் புகார் அனுப்புவதற்கே மக்கள் தயங்குகின்றனர். மேலும் இந்த எண் பற்றிய பெரும்பாலான விளம்பர போர்டுகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் இந்த எண்ணை பொதுமக்கள் மறந்துவிடும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது. எனவே வாட்ஸ்-அப் மூலம் புகார் தெரிவிக்கும் திட்டத்தின் நிலை என்ன? தினமும் வரும் புகார்களின் எண்ணிக்கை எவ்வளவு? அந்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பன உள்ளிட்டவை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் ஆய்வு செய்து வாட்ஸ்-அப்பில் புகார் அளிக்கும் திட்டத்தை புத்துயிர் பெற செய்ய வேண்டும்.
இந்த வாட்ஸ்-அப் எண் வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டதால் மீண்டும் இந்த எண் பற்றிய விவரத்தை பொதுமக்களிடம் பதிய வைத்து அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்து போலீஸ்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் தற்போது பெரும்பாலானோர் ஸ்மார்ட் போன் என்கிற நவீன செல்போன் களையே பயன்படுத்தி வருகிறோம். அப்படி இருக்கையில் தங்கள் கண்ணுக்கு முன்பாக நடக்கும் எந்த ஒரு குற்ற சம்பவம் குறித்தும் தகவல் தெரிவிக்க மக்கள் முன் வருவர் என்பதில் சந்தேகமில்லை. வாட்ஸ்-அப்பில் வந்த புகார்களை கண்காணிக்க தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் ஒரு குழுவை போலீஸ் சூப்பிரண்டு அமைத்து செயல்பட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீஸ் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story