திருவாரூரில் பலத்த மழை: 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை


திருவாரூரில் பலத்த மழை: 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:15 AM IST (Updated: 2 Nov 2017 2:47 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பெய்த பலத்த மழையினால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

திருவாரூர்,

வங்க கடலில் ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் பலத்தமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த 30-ந் தேதி முதல் 2 நாட்கள் திருவாரூரில் பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

திருவாரூர், காணூர், கள்ளிக்குடி, தென்ஓடாச்சேரி ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு உள்ள 100 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ள னர். இந்தநிலையில் வயல்களில் தேங்கியுள்ள நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் பல இடங்களில் வடிகால் தூர்வாரப்படாததால் மழை நீர் வடிவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து காணூர் விவசாயிகள் சங்க தலைவர் அழகர்ராஜா கூறியதாவது:- குறுவை சாகுபடி இழந்ததால் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. இந்த நீரை வடிய வைக்க முடியவில்லை. எனவே பாசன வாய்க்கால்கள், வடிகால்களை உடனடியாக தூர்வார வேண்டும். சம்பா சாகுபடியை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Related Tags :
Next Story