குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த தினம்: மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த தினம்: மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 2 Nov 2017 4:30 AM IST (Updated: 2 Nov 2017 2:50 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மார்‌ஷல் நேசமணி சிலைக்கு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய் தமிழகத்தோடு இணைந்த தினம் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்ட விடுதலைக்காக போராடிய குமரியின் தந்தை என்று அழைக்கப்படும் மார்‌ஷல் நேசமணியின் உருவச்சிலைக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சங்கங்கள் சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்திருக்கும் மார்‌ஷல் நேசமணி மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி இளங்கோ, விஜயகுமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தனர். நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி, அ.தி.மு.க. துணை செயலாளர் அரசு வக்கீல் ஞானசேகர், மீனவ கூட்டுறவு ஒன்றிய இணைய தலைவர் சகாயம், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் சந்தோஷ் மற்றும் நிர்வ£கிகள் சந்திரன், கனகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அண்ணா பஸ் நிலையம் முன் உள்ள மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் தலைமை தாங்கினார். அந்தோணி முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. (அம்மா) அணி சார்பில் மாவட்ட செயலாளர் பச்சைமால் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. என்ஜினீயர் லட்சுமணன், குற்றியார் நிமால், ஹெமந்த் உள்பட பலர் பங்கேற்றனர். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற மாலை அணிவிப்பு நிகழ்ச்சிக்கு மாநில துணை பொதுச் செயலாளர் ஹில்மன்புரூஸ் தலைமை தாங்கினார். ஜார்ஜ் கர்ணன் உள்பட பலர் பங்கேற்றனர். மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் தேசிய செயற்குழு உறுப்பினர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அருள்ராஜ், மாநில செயலாளர் சுனில் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோல அ.தி.மு.க. முன்னாள் வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையிலும், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் தலைமையிலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரெஜிஸ்சிங் தலைமையிலும் மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

மேலும், பல்வேறு தமிழ் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகளும் மார்‌ஷல் நேசமணி சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.


Related Tags :
Next Story