குமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு

குமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் குறித்து போலீஸ் டி.ஐ.ஜி. மகேந்திரகுமார் ரத்தூர் நேற்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரிடர் மேலாண்மையை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுபோல குமரி மாவட்ட பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு அதிகாரியாக சென்னை போலீஸ் தொழில் நுட்ப பிரிவு டி.ஐ.ஜி. மகேந்திரகுமார் ரத்தூர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் ஆய்வு பணிக்காக நேற்று குமரி மாவட்டம் வந்தார்.
நாகர்கோவிலில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்த டி.ஐ.ஜி. மகேந்திரகுமார் ரத்தூரை போலீஸ் சூப்பிரண்டு துரை வரவேற்றார். பின்னர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்ட அவர் ஒவ்வொரு பிரிவுகள் பற்றியும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து பேரிடர் மேலாண்மை ஏற்பாடுகள் தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், போலீஸ் சூப்பிரண்டு துரை, உதவி சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் பங்கேற்றனர்.
குமரி மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து 66 போலீசாருக்கு ஏற்கனவே சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் அந்தந்த போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வருகிறார்கள். டி.ஐ.ஜி. வருகையையொட்டி அவர்கள் அனைவரும் நேற்று ஆயுதப்படை முகாமுக்கு வந்து அணி வகுத்து நின்றனர்.
இந்த நிலையில் டி.ஐ.ஜி. மகேந்திரகுமார் ரத்தூர் ஆயுதப்படை முகாமுக்கு சென்று பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசாரை சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி பற்றி கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிக்கொள்பவர்களை காப்பாற்ற பயன்படுத்தும் மிதவைகள், நவீன படகுகள், படகுகளுக்கும் பயன்படுத்தும் என்ஜின், முதலுதவி கருவிகள் உள்ளிட்ட உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் புறப்பட்டு சென்றார்.
இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை நிருபர்களிடம் கூறியபோது, ‘குமரி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள போலீசார் தயார் நிலையில் உள்ளனர். குமரி மாவட்டத்தை பொறுத்த வரையில் 62 கிராமங்கள் வெள்ள பாதிப்பு வரும் என கண்டறியப்பட்டுள்ளது. இதில் 27 கிராமங்கள் அதிக பாதிப்படையும் என்பது தெரியவந்துள்ளது. எனவே இங்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் உடனே மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள மீட்பு குழுவினர் தயாராக இருக்கிறார்கள்‘ என்றார்.

Related Tags :
Next Story