குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மரம் விழுந்து கார் சேதம்
குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் மரம் சாய்ந்து விழுந்து கார் சேதமடைந்தது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் பெய்த மழை அதிகபட்சமாக அடையாமடை பகுதியில் 52 மி.மீ. பதிவாகியிருந்தது. இதுபோல குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–
ஆரல்வாய்மொழி– 12, சுருளோடு– 14.2, கன்னிமார்– 3.5, ஆனைகிடங்கு– 8, குளச்சல்– 3, நிலப்பாறை– 30, மயிலாடி– 21, சுருளோடு– 14, பூதப்பாண்டி– 3, பாலமோர்– 14.2, கொட்டாரம்– 24, புத்தன்அணை– 18.2, திற்பரப்பு– 36 என்ற அளவிலும், அணை பகுதிகளில் பேச்சிபாறை– 14.6, பெருஞ்சாணி– 19.6, சிற்றார் 1– 17.6, சிற்றார் 2– 24, மாம்பழத்துறையாறு– 12.5, முக்கடல்– 12.5 என்று அளவில் மழை பெய்திருந்தது.
அணை பகுதிகளில் மழை பெய்துள்ளதால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து இருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு நேற்று 368 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 344 கனஅடி, சிற்றார் 1 அணைக்கு 145 கனஅடி, சிற்றார் 2 அணைக்கு 215 கனஅடி, மாம்பழத்துறையாறு அணைக்கு 8 கனஅடி தண்ணீர் வந்தது.
நாகர்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்று வீசியது. இதில் வடசேரி ரவிவர்மன் புதுத்தெருவில் நின்ற ஒரு வேப்பமரம் ரோட்டில் சாய்ந்தது. காற்றில் சாய்ந்த அந்த மரம் அங்கு நிறுத்தியிருந்த ராஜேந்திரன் என்பவரது கார் மீது விழுந்தது. இதில் அந்த கார் சேதம் அடைந்தது. மின் வயர்களும் அறுந்து விழுந்தன. இதனால் அங்கு சில வீடுகளுக்கு மின்சாரம் தடைபட்டது. அதைத் தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் அங்கு வந்து மின் இணைப்புகளை சரிசெய்தனர்.
இதுபோல கன்னியாகுமரியில் இடி–மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சங்கிலித்துறை கடற்கரைக்கு செல்லும் பாதையில் காந்தி மண்டபம் அருகே இருந்த தடுப்பு சுவர் இடிந்து கடலுக்குள் விழுந்தது. தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அதன் அருகே உள்ள மின்கம்பம் ஆபத்தான நிலையில் நிற்கிறது. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மார்த்தாண்டம் பகுதியில் நேற்று பகல் முழுவதும் இடை இடையே சாரல் மழையும், பலத்த மழையும் பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Related Tags :
Next Story