வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களின் எடையை கண்டறியும் கருவி


வீடுகளுக்கு வழங்கப்படும் கியாஸ் சிலிண்டர்களின் எடையை கண்டறியும் கருவி
x
தினத்தந்தி 3 Nov 2017 3:45 AM IST (Updated: 3 Nov 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

சமையல் கியாஸ் சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பான நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கோவை,

வீடுகளுக்கு வழங்கப்படும் சிலிண்டர்களின் எடை குறைவாக இருப்பதை கண்டறியும் கருவியை, ஊழியர்களுக்கு வழங்க முடிவு செய்து உள்ளதாக நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டத்தில் கியாஸ் நிறுவன அதி காரிகள் தெரிவித்தனர்.

சமையல் கியாஸ் சிலிண்டர் பிரச்சினைகள் தொடர்பான நுகர்வோர் குறைதீர்ப்பு கூட்டம் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் சார்பில் பேசும் போது கூறியதாவது:-

கோவையில் பதிவு செய்த 2 நாட்களுக்குள் சிலிண்டர்கள் வழங்கப்படுவது இல்லை. மிகவும் தாமதம் ஆகிறது. சில வீடுகளுக்கு எடைகுறைவான சிலிண்டர்களை ஊழியர்கள் வழங்குகின்றனர். எடையளவு கருவி கொண்டு செல்ல வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிப்பதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதிலளித்த ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

சிலிண்டர் எடை குறைவாக உள்ளதை கண்டறியும் வகையில் ஊழியர்களுக்கு எடை அளவு கருவிகள் விரைவில் வழங்கப்படும். இதற்காக 1 லட்சம் எண்ணிக்கையில் எடை அளவு கருவி வாங்கப்படுகிறது. இது 4 மாதங்களில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story