தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு


தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 3 Nov 2017 4:15 AM IST (Updated: 3 Nov 2017 1:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வயல்களில் தேங்கும் தண்ணீர் வடிவதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்து உள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. நேற்று முன்தினம் மழை இன்றி காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் மீண்டும் மழை பெய்யத்தொடங்கியது. தஞ்சையில் காலை முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, திருவிடைமருதூர், மஞ்சளாறு, அணைக்கரை பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.

இந்த மழையினால் கும்பகோணம் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்ட தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்காமல் வடியும் வகையில் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.

காவிரியில் 100 கன அடி வீதமும், வெண்ணாற்றில் 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து உபரி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்படுவது குறைக்கப்பட்டுள்ளதால் வயல்களில் தேங்கும் தண்ணீர் எளிதில் வடிந்து வருகிறது. 

Related Tags :
Next Story