வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து துறையினரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
வடகிழக்கு பருவமழையையொட்டி அனைத்து துறையினரும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் அறிவுறுத்தினார்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது மாவட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் 6 வட்டங்களுக்கு 6 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் முதல் பொறுப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளை விழிப்புடன் கண்காணித்து பணிகளை மேற்கொள்வதுடன் அக்குழுக்களை சேர்ந்த அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையின் மூலம் கண்மாய்கள், பாசன கால்வாய்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்காணித்து பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டால் அதை உடனடியாக சரிசெய்யும் அளவில் மணல் மூட்டைகள் மற்றும் பணியாளர்களுடன் தயார் நிலையில் வைத்இருக்க வேண்டும். மேலும் கடந்த காலங்களில் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை மிகுந்த கவனத்துடன் கண்காணித்து நீர்நிலைகள் மற்றும் வரத்து வாரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், அடைப்புகளை உடனே சரிசெய்திட வேண்டும். மாவட்ட வழங்கல் துறையின் மூலம் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கக்கூடிய பகுதிகளை முன் கூட்டியே தேர்வு செய்து அந்த பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, மண்எண்ணெய் போன்றவைகளை இருப்பு வைக்க வேண்டும்.
பொது சுகாதாரத்துறையின் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ முகாம் அமைத்து செயல்பட வேண்டும். அதேபோல் கால்நடை பராமரிப்புத்துறையும் மருத்துவ முகாம் அமைத்து கால்நடைகளை பாதுகாத்து வரவேண்டும்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையினர் மூலம் ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீட்பு குழு மற்றும் படகுகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். நெடுஞ்சாலைத்துறையின் மூலம் சாலைகளை அவ்வப்போது கண்காணித்து வருவதுடன் பாதிப்படைந்தால் உடனடியாக சரி செய்திட தயார் நிலையில் இருக்க வேண்டும். மாவட்ட வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள், அரசு பள்ளி வளாகங்களில் தங்க வைக்க முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்வதுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் உடனடியாக வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சிவப்பிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் விமல்ராஜ், சரவணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் கதிர்வேல், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story