உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் ஆய்வு


உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2017 4:15 AM IST (Updated: 3 Nov 2017 2:11 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

திண்டிவனம்,

திண்டிவனம் உழவர் சந்தையில் மாநில வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணை இயக்குனர் வீரமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் உழவர் சந்தைக்கு விற்பனைக்காக வந்திருந்த காய்கறிகளையும், அதன் விலையையும் அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து சந்தையில் குடிநீர், கழிப்பிட வசதி முறையாக உள்ளதா என்று சரிபார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம், பொது மக்களுக்கு தொற்று நோய் பரவாத வகையில் உழவர் சந்தையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், மேலும் காய்கறிகளுக்கு சரியான முறையில் விலை நிர்ணயம் செய்து சுத்தமான காய்கறிகளை மட்டுமே விற்பனை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் முறைகேடுகள் ஏதும் நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வின் போது விழுப்புரம் மாவட்ட வேளாண் வணிகத்துறை இயக்குனர் தனசேகர், வேளாண்துறை அலுவலர்கள் சுமதி, சரவணன், உதவி வேளாண் அலுவலர்கள் இந்துமதி, சீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story