கல்லறை திருநாளையொட்டி குடும்பத்தினர் கல்லறையில் கிறிஸ்துவர் அஞ்சலி


கல்லறை திருநாளையொட்டி குடும்பத்தினர் கல்லறையில் கிறிஸ்துவர் அஞ்சலி
x
தினத்தந்தி 3 Nov 2017 3:00 AM IST (Updated: 3 Nov 2017 2:28 AM IST)
t-max-icont-min-icon

கல்லறை திருநாளையொட்டி குடும்பத்தினர் கல்லறையில் கிறிஸ்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மும்பை,

கல்லறை திருநாளையொட்டி குடும்பத்தினர் கல்லறையில் கிறிஸ்துவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கல்லறை திருநாள்

உலகம் முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 2–ந் தேதியை கிறிஸ்துவர்கள் கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்த நாளில் கிறிஸ்துவர்கள் தங்கள் குடும்பத்தை சேர்ந்த இறந்தவர்களின் கல்லறையில் மலர் மாலை அணிவித்து மெகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவார்கள்.

கல்லறை திருநாள் அனைத்து ஆன்மாக்கள் நாளாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கல்லறையில் அஞ்சலி

நேற்று கல்லறை திருநாளையொட்டி சிவ்ரியில் உள்ள கல்லறை தோட்டத்தில் திரளான தமிழ் கிறிஸ்துவர்கள் மறைந்த தங்கள் குடும்பத்தினர் கல்லறையை மலரால் அலங்கரித்து, மலர் மாலை, வளையம் வைத்தும்,மெழுவர்த்தி, ஊதுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல கல்லறை திருநாளையொட்டி மும்பை, தானே, நவிமும்பையில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான தமிழ் கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story